வேலை நமதே!

52

-சுந்தரபுத்தன்

பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி

மத்திய அரசின் பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டேண்டேர்ட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 150 சயின்டிஸ்ட் பி பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங், மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங், சிவில் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், ஃபுட் டெக்னாலஜி உள்ளிட்ட 11 பிரிவுகளில், சயின்டிஸ்ட் பி பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு ஆகிய தகவல்கள் இணையதளத்தில் உள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ, 100. தாழ்த்தப்பட்ட, பழங்குடிப் பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.3.2020

விவரங்களுக்கு: https://bis.gov.in

புதுச்சேரி ஜிப்மரில் 15 வகை பணிகள்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் காலியாக உள்ள சீனியர் நிதி ஆலோசகர் உள்ளிட்ட 15 வகையான பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதிவாளர், தேர்வுக் கண்காணிப்பாளர், சிஸ்டம் அனலிஸ்ட், சீனியர் ஸ்டோர் ஆபீசர், பர்ச்சேஸ் ஆபீசர், துணை பதிவாளர், மேலாளர், டேட்டா புராசசிங் உதவியாளர், சீனியர் போட்டோகிராபர் உள்ளிட்ட பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 11.5.2020

விவரங்களுக்கு: www.jipmer.edu.in

இஸ்ரோவில் சயின்டிஸ்ட் என்ஜினீயர்

அகமதாபாத் நகரில் உள்ள இஸ்ரோவின்கீழ் இயங்கும் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் என்ஜினீயர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எலெக்ட்ரானிக்ஸ், இயற்பியல், கம்ப்யூட்டர் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஸ்ட்ரக்சுரல் அண்ட் எலெக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் சயின்டிஸ்ட் என்ஜினீயர் பணிகள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் துறைகளில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகள் மற்றும் டெக்னீசியன் பி, டிராப்ஸ்ட்மேன் பி பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 3.4.2020

விவரங்களுக்கு: www.sac.gov.in

சேலத்தில் ஊரக வளர்ச்சித் துறை பணிகள்

சேலம் மாவட்டத்தில் பஞ்சாயத்து அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தலைவாசல், வாழப்பாடி, கெங்கவல்லி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, எடப்பாடி, நங்கவல்லி, மேச்சேரி உள்ளிட்ட 13 இடங்களில் 33 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது அவசியம். பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

அஞ்சல்வழியில் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முழு விவரங்களும் இணையதளத்தில் உள்ளன.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.3.2020

விவரங்களுக்கு: https://salem.nic.in

காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் 133 பணிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 133 உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவுப் பயிற்சிப் படிப்பை முடித்திருக்கவேண்டும்.

பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், எம்பிசி, சீர்மரபினர், பிசி, பிசி (முஸ்லிம்) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயதுவரம்பு கிடையாது.

விண்ணப்பக்கட்டணம் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளவேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.3.2020

விவரங்களுக்கு: www.kpmdrb.in

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் வேலை

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 62 உதவியாளர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவுத் துறையில் பயிற்சிப்படிப்பை முடித்திருக்கவேண்டும். விண்ணப்பதாரர் 1.1.2019 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இடஒதுக்கீடு முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விவரங்களுக்கு: www.drbnamakkal.net

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 31.3.2020

பல்லுயிர்ச்சூழல் நிறுவனத்தில் வேலை

ஹைதராபாத் நகரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபாரஸ்ட் பயோடைவர்சிட்டி கல்வி நிலையத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகளுக்கு வேளாண்மை, தாவரவியல், பயோடெக்னாலஜி, உயிரியல் பாடப் பிரிவுகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 20.4.2020

விவரங்களுக்கு: http://ifb.icfre.gov.in

கப்பல் நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணிகள்

விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் தள நிறுவனத்தில் காலியாக உள்ள 51 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் துறையில் டிசைனர், ஜூனியர் சூப்பர்வைசர், அலுவலக உதவியாளர், ஜூனியர் ஃபயர் இன்ஸ்பெக்டர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்குத் தேவையான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியில் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி: General Manager (Hr), Ac, Hindustan Shipyard Ltd, Gandhigram Post, Visakhapatinam

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 7.4.2020

விவரங்களுக்கு: www.hslvizag.in

டெல்லி ஐஐடியில் பேராசிரியர் பணி

டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) கல்வி நிலையத்தில் காலியாக உள்ள பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் கொண்ட பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் பேராசிரியர் மற்றும் உதவிப்பேராசிரியர் பணிகளுக்குத் தேவையான கல்வித் தகுதி, வயதுவரம்பு போன்ற தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்களுடன் இணைத்து பதிவஞ்சல் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்பவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.3.2020

அஞ்சலில் அனுப்பக் கடைசி தேதி: 6.4.2020

விவரங்களுக்கு: www.nitdelhi.ac.in

SHARE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here